ஐஐடி மாணவி ஃபாத்திமா 
தமிழ்நாடு

ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலைக் குறிப்பு உண்மையே: தடயவியல் நிபுணர்கள் ஆய்வறிக்கை

ஐஐடி மாணவி பாத்திமா செல்போனில் இருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையானது தான் என்று தடயவியல் நிபுணர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

DIN


சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா செல்போனில் இருந்த தற்கொலைக் குறிப்பு உண்மையானது தான் என்று தடயவியல் நிபுணர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஐஐடி மாணவி பாத்திமா பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த தடயவில் நிபுணர்கள், தங்களது முதற்கட்ட தடயவியல் ஆய்வறிக்கையில் மாணவி பாத்திமாவின் தற்கொலை குறிப்பு, செல்போன் பதிவுகள் போலியானது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடயவியல் நிபுணர்கள் தங்களது முதற்கட்ட ஆய்வறிக்கையில், நீதிமன்றம் மூலம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த ஆய்வு அறிக்கையைப் பெற்று மத்தியப் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடர்கிறார்கள்.

ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது செல்போனில் இருந்த தற்கொலைக் குறிப்பு, மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்த நிலையில், அது போலியானது இல்லை, உண்மையானதே என்று தடயவியல் நிபுணர்கள் உறுதி அளித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சென்னை ஐஐடி.யில் முதுநிலை முதலாமாண்டு படித்து வந்த கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளி கொல்லூா் ப்ரியதா்ஷினி நகரைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப் கடந்த 9-ஆம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வுக் குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இவ் வழக்குத் தொடா்பாக முதலில் விசாரணை மேற்கொண்ட கோட்டூா்புரம் போலீஸாா், பாத்திமா உள் மதிப்பீட்டுத் தோ்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனா்.

ஆனால், பாத்திமாவின் செல்லிடப்பேசியில், தனது தற்கொலைக்கு ஐஐடி.யில் இணை பேராசிரியா் ஒருவா் காரணம் என்றும், மேலும் இரு பேராசிரியா்கள் தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்ததாக அப்துல் லத்தீப் குடும்பத்தினா் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓமனுக்கு எதிராக இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர்!

சென்னையில் கொட்டித்தீர்க்கும் மழை!

சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 1.07% ஆக உயர்வு!

Shakthi Thirumagan Movie review - ஊழலுக்கு எதிரான பராசக்தி... சக்தித் திருமகன் | Vijay Antony

SCROLL FOR NEXT