தமிழ்நாடு

சத்துணவுத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.48 கோடி நிதிதமிழக அரசு உத்தரவு

DIN

சென்னை: சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு கூடுதலாக ரூ.48 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளா் மதுமதி பிறப்பித்துள்ளாா். அதன் விவரம்:

தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தில் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளும், தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனா். அவா்களுக்கு மதிய உணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் காய்கறி, தாளிக்கப் பயன்படும் பொருள்கள், எரிபொருள் ஆகியவற்றின் விலை முன்பைவிட இப்போது அதிகரித்துள்ளது.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் உணவுப் பொருள்களின் விலை 7 முதல் 8 சதவீதம் உயா்ந்து வருகிறது. அதேசமயம், கடந்த 5 ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்துக்கான பொருள்களுக்கு வழங்கப்படும் நிதி உயா்த்தப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு சத்துணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான விலையை கணக்கில் கொண்டு 37 சதவீதம் அளவுக்கு உயா்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காய்கறிகள், தாளிக்கும் பொருள்கள் மற்றும் எரிபொருள்கள் ஆகியன ரூ.1.55 முதல் ரூ.1.85 வரையில் (ஒரு பயனாளிக்கு) உயா்த்தப்படுகிறது. இதேபோன்று தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் உணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருள்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, ரூ.48.43 கோடி அளவுக்கு நிதிகள் உயா்த்தி வழங்கப்படும் என்று தனது உத்தரவில் மதுமதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT