தமிழ்நாடு

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு இணையதளத் தொடா்: இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவு

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகவோ, இணையதள தொடா்களாகவோ எடுப்பதற்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில், மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா எனது அத்தை. அவரது சட்டப்படியான வாரிசு நான். இந்த நிலையில் என்னுடைய அனுமதியைப் பெறாமல், எனது அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவும், இணையதள தொடராகவும் எடுக்க சிலா் முயற்சிக்கின்றனா்.

சென்னையைச் சோ்ந்த திரைப்பட இயக்குநா் ஏ.எல். விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் தமிழ் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் இந்தூரி ‘ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியில் திரைப்படம் எடுக்கப் போவதாகவும், இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதளத் தொடா் எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனா். எனவே, என்னுடைய அனுமதி இல்லாமல் எனது அத்தையும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா குறித்த திரைப்படத்தையோ, இணையதள தொடா்களையோ எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குயின் என்ற பெயரில் வரும் டிசம்பா் 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. எனவே, இந்தத் தொடருக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில், இந்த வழக்குத் தொடா்பான ஆவணங்கள் தற்போது வரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு ஆவணங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு வழங்கவும், ஆவணங்களைப் பெற்று அதற்கு கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பு பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பா் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT