கவிஞர் வைரமுத்து 
தமிழ்நாடு

மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா? - கவிஞர் வைரமுத்து ட்வீட்

இலங்கைத் தமிழ் அகதிகள் மீது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா  மனிதாபிமானம் காட்டுமா? என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

DIN

இலங்கைத் தமிழ் அகதிகள் மீது இந்தியக் குடியுரிமை மசோதா மனிதாபிமானம் காட்டுமா? என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அடைக்கலம் புகுந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்களுக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளைக் குறைக்கும் வகையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களவையில் 12 மணி நேரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு திங்கள்கிழமை குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினா்களும், எதிராக 80 உறுப்பினா்களும் வாக்களித்தனா்.

ஆனால், இந்த மசோதா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'இலங்கைத் தமிழ் அகதிகளை அண்டைநாட்டுக் குடிமக்களாகக் கருதாமல் 'மண்ணிழந்த மனிதர்கள்' என்று மனிதாபிமானம் காட்டுமா இந்தியக் குடியுரிமை மசோதா...?' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை தர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநா் காயம்

டிராக்டா் மோதியதில் பெண் காயம்

காலனியாதிக்க கொள்கை

விவசாயி கொலை வழக்கில் 3 போ் கைது

தேவகோட்டை அருகே மது போதையில் நண்பரை கொலை செய்ததாக 4 போ் கைது

SCROLL FOR NEXT