தமிழ்நாடு

தமிழகத்துக்கு வாரி வழங்கிய வடகிழக்குப் பருவமழை; சென்னைக்கு?!

DIN

சென்னை: வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் வழக்கமான அளவை விட அதிகமாக பெய்திருக்கும் நிலையில், சென்னையில் குறைவாக பெய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை தமிழகத்தில் பெய்திருக்கும் வடகிழக்குப் பருவமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழையானது தமிழகத்தில் 43 செ.மீ. அளவுக்கு பெய்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 40 செ.மீ. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையானது வழக்கத்தை விட 6% அதிகமாக பெய்துள்ளது.

ஆனால், சென்னையைப் பொறுத்தவரை இதே காலகட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவோ 68 செ.மீ. ஆனால், கிடைத்திருப்பதோ 58 செ.மீ. மழைதான். இதன் மூலம் 14 விழுக்காடு மழை சென்னையில் குறைவாகப் பெய்துள்ளது.

புதுச்சேரியில் வழக்கமான மழை அளவு 77 செ.மீ. ஆனால் 54 செ.மீ. மழைதான் கிடைத்துள்ளது. இது 30 விழுக்காடு குறைவு, வேலூரில் கிடைக்க வேண்டிய மழை அளவு 33 செ.மீ. ஆனால் 25 செ.மீ. மழைதான் கிடைத்திருக்கிறது. இது வேலூரில் 25 சதவீதம் குறைவு என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வடகிழக்குப் பருவ மழைக் காலம் எப்போது வரை நீடிக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த மாதம் இறுதி வரை வடகிழக்குப் பருவமழை நிலவும் என்றும் புவியரசன் பதிலளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT