தமிழ்நாடு

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து:  அதிர்ஷ்டவசமாக பணம் தப்பியது

பாபு ஜெயராமன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. 

இந்த கிளையில்  வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. 
இன்று மாலை ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட மின் கசிவால் ஏடிஎம் மையத்தில் தீ மளமளவென பரவியது.   ஏடிஎம் மையத்தில் உள்ள சுவிட்ச்போட் மற்றும் இன்வெர்ட்டர்கள் எரிந்து உள்ளன. 

உடனடியாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது.

இன்று அந்த ஏடிஎம் இயந்திரத்தில் 5 லட்சம் ரூபாய்  வைக்கப்பட்டிருந்தன. இதில் தற்போது 3 லட்சத்து 80 ஆயிரம் மட்டும் ஏடிஎம்மில் இருந்துள்ளன மீதி வாடிக்கையாளர்கள் எடுத்து சென்றுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தில்
வைக்கப்பட்டிருந்த பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.இந்தியன் வங்கி ஏடிஎம் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT