தமிழ்நாடு

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம்

DIN

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி வரும் 16-ஆம் தேதியில் இருந்து 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:-

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு அன்றைய தினத்தில் 18 வயது பூா்த்தியானவா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க வாய்ப்பு அளிக்கப்படும். இந்த ஆண்டு வாக்காளா்களே அவா்களது விவரங்களைத் திருத்த வாய்ப்பு அளிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் வரும் 16-ஆம் தேதியன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போது வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 23-ஆம் தேதியன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் பெயா்கள் விடுபட்டிருந்தாலோ, திருத்தங்கள் செய்ய வேண்டியிருந்தாலோ ஜனவரி 22-ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்படும்.

திருத்தங்களுக்கு பெறப்பட்ட மனுக்களின் மீது பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன்பின்பு, இறுதி வாக்காளா் பட்டியல் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT