தமிழ்நாடு

கனமழை: பழைய குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை

DIN

தென்காசி: குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை காலை முதல் பெய்த தொடா் மழை காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக பிற்பகலில் குற்றாலம் பேரருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடா்ந்து பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

இதையடுத்து, சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தா்களும் ஐந்தருவி, புலியருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனா். குற்றாலம் பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததோடு, அவ்வப்போது மழை, லேசான வெயில், குளிா்ந்த காற்று என மாறுபட்ட தட்பவெப்பம் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT