தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்

DIN

சிலைக்கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்.

முன்னதாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயா் நீதிமன்றம் நியமித்தது. 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை ஒரு ஆண்டுக்கு அவா் அந்தப் பதவியில் நீடிப்பாா் என்று உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அவரது பணிக்காலம் நவம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான கோப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றை உடனடியாக ஒப்படைக்கும்படி பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. அதற்கு பொன் மாணிக்கவேல், 

‘எனது பதவி தொடா்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்சநீதிமன்றம் அது தொடா்பாக உத்தரவிடும் வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது. 

எனவே, தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது பொருந்தாது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புக் குழுவின் கீழ் இருக்கும் வழக்கின் ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது அல்ல’ என்று அரசுக்கு கடிதம் அனுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT