கோப்புப்படம் 
தமிழ்நாடு

எந்தவொரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது: ரஜினி

எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது என ரஜினிகாந்த் டிவீட் செய்துள்ளார்.

DIN


எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது என ரஜினிகாந்த் டிவீட் செய்துள்ளார்.

மத்திய அரசு அண்மையில் இயற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இது ஒரு சில இடங்களில் வன்முறையில் நிறைவடைந்தது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

அதில் குறிப்பிடுகையில்,

"எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக் கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3,300 கோடியில் உருவாகியுள்ள ஸ்டிரேஞ்சர் திங்ஸ் சீசன் 5!

கலையையும் கலைஞர்களையும் போற்ற வேண்டியது அரசின் கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஹிட் அன்ட் ஃபிட்... நியதி ஃபட்னானி!

“செங்கோட்டையன் திமுக இல்லை! என்னை ஏன் கேட்கிறீர்கள்?” கனிமொழி எம்.பி

காரில் ஒன்றாக பயணித்த MS Dhoni & Virat Kholi!

SCROLL FOR NEXT