தமிழ்நாடு

ஆம்பூர் அருகே 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது

ஆம்பூர் அருகே சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் உதவியுடன் மின்விளக்கு இல்லாத இடத்தில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் வியாழக்கிழமை இரவு பிடித்தனர்.

DIN

ஆம்பூர் அருகே சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மின்விளக்கு இல்லாத இடத்தில் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் வியாழக்கிழமை இரவு பிடித்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனா பள்ளி பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 7 அடி நீள மலைப்பாம்பு உள்ளதாக ஆம்பூர் வனத்துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெருமாள் ஆகியோர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் பாம்பை பிடித்தனர். அங்கு மின்விளக்கு இல்லாத போதிலும், டார்ச் லைட்டை பயன்படுத்தி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT