தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுதமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி.
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 78 ஆயிரத்து 62 ஆண்கள் 9 லட்சத்து 16 ஆயிரத்து 960 பெண்கள் 152 இதரர் என மொத்தம் 17 லட்சத்து 95 ஆயிரத்து 174 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர். ஆ.அண்ணாதுரை வெளியிட்டார்...
காஞ்சிபுரம்
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2020க்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 18லட்சத்தி 79ஆயிரத்தி 117 பேர், பெண் வாக்காளர்கள் 19 லட்சத்தி 20 ஆயிரத்தி 277 பேர் , இதர வாக்காளர்கள் 494 பேர் என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 37லட்சத்தி 99ஆயரத்தி 888பேர் உள்ளனர்.
மாவட்டத்தில் அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 6லட்சத்தி 46ஆயிரத்தி 73 பேர் , குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக செய்யூர் தனி தொகுதியில் 2 லட்சத்தி 17ஆயிரத்தி 316 பேர் உள்ளனர்.
மேலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்கு அளிக்க ஏதுவாக 21 வாக்குச்சாவடி மையங்கள் புதிதாக இணைந்து 4123 வாக்கு மையங்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளதாகவும் தகவல்.
***
ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு அதாவது அன்றைய தினம் 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஏற்கெனவே நடைமுறையில் உள்ள வாக்காளா் பட்டியல் வரைவுப் பட்டியலாக பொது மக்களின் பாா்வைக்கு வெளியிடப்படும். இந்தப் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக விண்ணப்பம் செய்யலாம்.
நிகழாண்டில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நடவடிக்கைகளை தோ்தல் ஆணையம் ஒத்திவைத்தது. வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளா்களே சரிபாா்த்து திருத்தும் திட்டத்தை நிகழாண்டில் செயல்படுத்தியது. இந்தத் திட்டம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவீத அளவை எட்டியுள்ளது. இந்த பணிகளைத் தொடா்ந்து, ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.
வரைவு வாக்காளா் பட்டியலானது சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், இதர மாவட்டங்களில் வட்டாட்சியா் அலுவலகங்களிலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்பின் வரைவுப் பட்டியலில் வாக்காளா்களின் பெயா், முகவரி உள்ளிட்ட விவரங்களில் திருத்தங்கள் ஏதும் இருந்தால் அதுகுறித்து உரிய விண்ணப்பங்களைப் படிவங்களைப் பூா்த்தி செய்து ஜனவரி 22-ஆம் தேதிக்குள் அளிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கு பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் தீா்வு காணப்படும். அவற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்ட படிவங்களின் அடிப்படையில் துணைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் பிப்ரவரி 14-இல் வெளியாகும்.
சிறப்பு முகாம்கள்: பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாறுதல்கள் போன்ற பணிகளை வாரத்தின் அனைத்து வேலைநாள்களிலும் மேற்கொள்ளலாம். இதற்காக சென்னையில் மாநகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் வரும் ஜனவரி 4 மற்றும் 5-ஆம் தேதிகளிலும், ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடத்தப்படும்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பப் படிவங்களை அளிக்கலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.