தமிழ்நாடு

புதுச்சேரி மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது: முதல்வர் நாராயணசாமி

DIN

புதுச்சேரி மாநிலம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாநிலம் என்றும் இங்கு கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அனைவரும் மகிழ்வுடன் ஒன்றாக வாழ்கின்றனர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலியும், பிராத்தனைகளும் நடைபெற்றது.

இந்நிலையில் மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

பின்னர் பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாநிலம் என்றும் இங்கு கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அனைவரும் மகிழ்வுடன் ஒன்றாக வாழ்கின்றனர் என்றும் இயேசு பிறந்த இந்நன்நாளில் அனைவரும் சந்தோஷத்துடன் இருக்கவும் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT