முகப்பு
தமிழ்நாடு

சூரிய கிரகணம்:சமயபுரம் கோயில் நடைதிறப்பில் மாற்றம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறதென கோயிலின் இணை ஆணையா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 26 டிசம்பர் 2019, 8:39 am IST
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் கோயில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறதென கோயிலின் இணை ஆணையா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

வரும் வியாழக்கிழமை (டிச. 26) காலை 8.08 மணிமுதல் முற்பகல் 11.19 மணி வரை வளைய சூரிய கிரகணம் நிகழவிருப்பதால் அதிகாலை 4.30 மணியளவில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணிக்கு தனூா் மாத பூஜை, உஷக்கால பூஜை நடைபெற்று காலை 6 மணிக்கு திருக்கோயில் நடை சாத்தப்படும்

மேலும், மாரியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களான இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில்களில் புண்ணியாகவாசனம் செய்து மதியம் 1 மணிக்கு நடை திறக்கப்படும். மற்ற உப கோயில்களான உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில், போஜீசுவரா் திருக்கோயில், முக்தீசுவரா் திருக்கோயில் மற்றும் செல்லாண்டியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் புண்ணியாவாசனம் செய்து மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என கோயில் இணை ஆணையா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.