தமிழ்நாடு

தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு 

தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் பிளாஸ்டிக் உறையுடன் பொருட்களை விற்கும் 95 நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி இத்தகைய பொருட்களை பிளாஸ்டிக் உறையுடன் விற்பனை செய்யும் நிறுவனங்களை, இனி அவற்றை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பின்று அகற்றுவதற்கான தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

அத்துடன் தங்களது உற்பத்தி பொருட்கள் யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது என்கின்ற விபரத்தை அளிக்க வேண்டும்.

இதன்மூலம் அவற்றை கண்காணிப்பது என்பது எளிதாக இருக்கும்.

தமிழக அரசு ஜனவரி 1-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பிரிட்டானியா, டாடா, கெவின்கேர், ஆம்வே ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதய நோய், நீரிழிவு... உடல் பருமன் இருந்தால்கூட அமெரிக்க விசா கிடைக்காமல் போகலாம்!

வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் இந்தியா: பிரதமர் மோடி

ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத் தலைவர் இன்று சுற்றுப்பயணம்!

நடந்தது என்ன? கௌரி கிஷன் பேட்டி!

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை! - சென்னை ஆட்சியர்

SCROLL FOR NEXT