தமிழ்நாடு

சென்னையில் உணரப்பட்ட நில அதிர்வுக்குக் காரணம் என்ன? வானிலை ஆய்வு மையம் விளக்கம்

DIN


சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இன்று காலை இந்திய நேரப்படி சுமார்  7.02 நிமிட அளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே வடகிழக்கே  600 கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்துக்குக் கீழே 10 மீட்டர் ஆழத்தில் நிலநகடுக்கம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேரில் உள்ள நிலநடுக்க கருவிகளில் பதிவாகியுள்ளது.

இது கடல் பகுதியில் நேரிட்டதால் நிலப்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT