தமிழ்நாடு

யானை பலம் கொண்டது அதிமுக கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார்

DIN


அதிமுக கூட்டணி யானை பலம் கொண்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் ஒட்டுமொத்த உணர்வு அந்த ஆலை தேவையில்லை என்பதுதான். இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. ஆலை மூடப்படவேண்டும் என்ற வாதத்தை உச்சநீதிமன்றத்தில் ஆணித்தரமாக எடுத்துவைத்தோம். நமது வாதங்கள் வலுவாக இருப்பதால் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருந்தது. 
மக்களவைத் தேர்தல்: மக்களவைத் தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி குறித்த அனைத்து விவரங்களும் வெளிப்படையாக தெரியவரும். அதிமுக கூட்டணியை பொருத்தவரை யானை பலம் கொண்ட கூட்டணி. யானைக்கு தும்பிக்கை நம்பிக்கையாக இருக்கிறதோ அதுபோன்று மக்களுக்கு நம்பிக்கையாக இருப்பது அதிமுகதான்.
 ஸ்டாலின் குறித்து நடிகர் கமல் சரியாகத்தான் கூறியுள்ளார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் நட்பும் இல்லை. எதிரியும் இல்லை.
எங்களைப் பொருத்தவரை எங்களுக்கு இருவர் மட்டுமே அரசியல் எதிரிகள். ஒன்று திமுக. அடுத்து அமமுக. அதிமுக எல்லோருக்கும் நிழல் தரக்கூடிய அரசு. ஆலமரம். இளைப்பாறும் இடம். இங்குதான் எல்லோரும் வந்து இளைப்பாறுவார்களே தவிர நாங்கள் எங்கும் சென்று இளைப்பாற  வேண்டிய அவசியம் இல்லை என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT