தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்றும் விசாரணை

DIN


சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகவும் தடை விதிக்க தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விசாரணை புதன்கிழமையும் (பிப். 20) தொடருகிறது. 
முன்னதாக, இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் ஆஜராகி, ஓய்வு பெற்ற அதிகாரி ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரிக்க அதிகாரம் பெற்றவர் இல்லை.  திறமையான அதிகாரியாக இருந்தாலும் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக தொடர்ந்து செயல்பாடுமாறு உச்சநீதிமன்றம் 2018, டிசம்பர் 13-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பில் அவ்வாறு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற குணத்தை உடையவரை சென்னை உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்துள்ளது. இதுபோன்ற சிறப்பு அதிகாரியை நியமிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை என்றார். 
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT