தமிழ்நாடு

அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சித்தது அநாகரிகமானது: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சித்தது அநாகரிகமானது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலையொட்டிஅதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பாமக அதிகாரபூர்வமாக இணைந்துள்ளன. பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும்  ஒதுக்கப்பட்டுள்ளன.

பாஜகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வுக்கான தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இருவரும் செவ்வாய்க்கிழமை கூட்டாக வெளியிட்டனர். 

இதுகுறித்து திருச்சியில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் விமர்சித்தது அநாகரிகமானது. இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT