தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மனோஜ்சாமி சரண்

DIN

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மனோஜ்சாமி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சயன், மனோஜ், சதீஷன், பிஜின், தீபு, உதயகுமார், மனோஜ்சாமி உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  இதுதொடர்பான வழக்கு விசாரணையில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை.

இவர்களைத் தொடர்ந்து பிஜின் மற்றும் தீபு ஆகியோரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  இதன் காரணமாக 4 பேருக்கு மாவட்ட நீதிபதி வடமலை பிடியாணை பிறப்பித்தார். இதையடுத்து, நீலகிரி மாவட்ட காவல் துறையினர் தனிப்படை அமைத்து பிஜின் மற்றும் தீபு ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சயன் மற்றும் மனோஜ் ஆகியோரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை உதகை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகாத மனோஜ்சாமிக்கு, நீதிபதி வடமலை பிடியாணை பிறப்பித்து வழக்கு விசாரணையை  மார்ச் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஜின், தீபு ஆகியோரின் காவலை நீட்டித்தும் உத்தரவிட்டார். இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட மனோஜ்சாமி ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT