தமிழ்நாடு

திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு 

DIN


தஞ்சாவூர்: திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட இயக்கம் திராவிடர் கழகம். சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட முதலாவது திராவிடக் கட்சி திராவிடர் கழகம். இக்கழகத்தின் தற்போதைய தலைவராக கி.வீரமணி இருந்து வருகிறார். 

இந்நிலையில், இன்று தஞ்சாவூரில் நடைபெற்றும் திராவிடர் கழகத்தின் சமூக நீதி மாட்டில், திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவர் குறித்த தகவலை கி.வீரமணி அறிவித்துள்ளார். மாநாட்டு கூட்டத்தில் வீரமணி பேசுகையில், எனது காலத்துக்கு பிறகு திராவிட கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் செயல்படுவார். கழத்தின் துணை தலைவராக இருந்து வரும் கலிபூங்குன்றன், மயிலாடுதுறையில் பிறந்தவர். இளமை காலத்தில் இருந்தே பெரியாரின் தொண்டர் ஆவார். நெருக்கடி நிலையின்போது அரசு வேலையை துறந்து திராவிடர் கழகத்தில் இணைந்தவர் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT