தமிழ்நாடு

71-வது பிறந்த தினம்: ஜெயலலிதா சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

DIN

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினத்தினை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினம் ஞாயிறன்று அதிமுக தொண்டர்களால் தமிழகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள  ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக முதல்வர் பழனிசாமி தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதாவின் படத்திற்கு பூத்தூவி மரியாதை செலுத்தினார். 

அத்துடன் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம், மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்வுகளும் கட்சி அலுவலகத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவின் 126% வரி எதிரொலி! சூரிய சக்தி பங்குகள் 14% சரிவு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடக்கியது திமுக: கே. அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெய்ட் அண்ட் ஸீ’ நிலைமை எதுவும் இல்லை: தமிழிசை

SCROLL FOR NEXT