முகப்பு
தமிழ்நாடு

தேமுதிகவுடன் இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை; பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது: ஓபிஎஸ்

தேமுதிகவுடன் இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:05 pm IST
கோப்புப்படம்
பகிர்:


தேமுதிகவுடன் இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் பேட்டியளிக்கையில், 

"மகா கூட்டணியில் பாஜக மற்றும் பாமக கட்சியை இணைத்திருக்கிறோம். மாநிலக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தைகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணியின் முழு வடிவம் தெரியவரும். 

Advertisement

Advertisement

இழுபறி என்ற பேச்சுக்கே இடமில்லை. பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நல்ல முடிவு வரும். 

கூட்டணி முழுமையாக அமைந்தவுடன் அனைத்துக் கட்சி தலைவர்கள் ஒன்றாக இணைந்து மிகப் பெரிய மாநாடு நடத்தப்படும். 

கூட்டணியில் இணைகின்ற கட்சிகள் குறைந்தபட்ச கோரிக்கைகளை வைப்பது தேர்தல் நடைமுறை தான். சில கட்சிகள் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறது. உறுதியாக கோரிக்கையின் முக்கியத்துவத்தை கருதி நல்ல முடிவை எடுப்போம்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.