தமிழ்நாடு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ரூ.414 கோடி செலவாகும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

DIN


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ரூ.414 கோடி செலவாகும் என்றும், இதற்கான தொகையை விடுவிக்குமாறு தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:-
மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறைச் செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். 
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவின்போது பயன்படுத்தப்பட உள்ள வாக்குச் சாவடிகளில் தண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமென அரசுத் துறைகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. 
மேலும், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வு தள மேடைகள், நிழல் அமைப்புகளை உருவாக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரூ.414 கோடி செலவு: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்காக ரூ.414 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை ஒதுக்கக் கோரி நிதித் துறையிடம் அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சுமார் 200 கம்பெனி துணை ராணுவப் படை தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அந்த எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, காவல் துறையில் 100 சதவீத பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி-ஊராட்சி, வருவாய்த் துறைகளில் மட்டும் பணியிட மாற்றங்கள் தொடர்பாக சில விளக்கங்கள் கோரப்பட்டன. இந்த விளக்கங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றார் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT