தமிழ்நாடு

8,909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள்: சேலம் மாவட்டம் முதலிடம்

DIN


தமிழகத்தில் 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்களே படித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், மிகக் குறைவான மாணவர்கள் கொண்ட மாவட்டங்களில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
சத்துணவு சாப்பிடும் 10-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறித்து சமூக நலத்துறை மூலம் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 8 ஆயிரத்து 909 அரசுப் பள்ளிகளில், 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாவட்டத்தில் 821 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இரண்டாவது இடத்தில் வேலூர் (451), மூன்றாவது இடத்தில் ராமநாதபுரம் (420), நான்காவது இடத்தில் சிவகங்கை (417), ஐந்தாவது இடத்தில் திருப்பூர் (409) ஆகிய மாவட்டங்கள் உள்ளன. 
அதேபோன்று ஆறாவது இடத்தில் திண்டுக்கல் (385), ஏழாவது இடத்தில் திருநெல்வேலி (371), எட்டாவது இடத்தில் ஈரோடு (355) ஆகிய மாவட்டங்களும் உள்ளன. தலைநகரான சென்னையில் மொத்தம் 55 பள்ளிகளில் 25-க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதேபோன்று தமிழகத்தின் 32 மாவட்டங்களின் விவரங்களும் வெளியாகியுள்ளன. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது, மீண்டும் ஒரு முறை சமூகநலத்துறை மேற்கொண்ட ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT