தமிழ்நாடு

திம்பம் மலைப் பாதையில் கடும் பனிப்பொழிவு: பொதுமக்கள் அவதி

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில் கடும் பனிப்பொழிவு காரணமாக, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை

DIN


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் திம்பம் மலைப் பாதையில் கடும் பனிப்பொழிவு காரணமாக, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்குகின்றனர்.
சத்தியமங்கலத்திலிருந்து மைசூரு செல்லும் சாலையில் அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப் பாதை உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1,105 மீட்டர் உயரத்தில் உள்ளதால் இங்கு உதகை போலவே காலநிலை நிலவுகிறது. மாலை 6 முதல் மறுநாள் காலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் பேருந்து, லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன. 
வெண்புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் திம்பம் மலைப் பாதையைக் கடந்து செல்ல கூடுதல் நேரம் ஆகிறது. சிறிய வாகனங்கள் பண்ணாரி, ஆசனூர் சோதனைச் சாவடிகளில் நின்று பனிமூட்டம் விலகிய பின்பு புறப்பட்டுச் செல்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க தலைமை தோ்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மத்திய படை பாதுகாப்பு!

எஸ்.பி. அலுவலகத்தில் குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

தில்லியில் கட்டுப்பாடு அமலுக்குப் பிறகும் நீடிக்கும் காற்று மாசு!

தஞ்சையில் ஜன.5-இல் அமமுக பொதுக் குழு

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

SCROLL FOR NEXT