தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும்!

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும்

DIN


அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கல்வி பயின்றிட ஏதுவாக, அரசின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலவச பேருந்து பயண அட்டை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்கப்படும்.  

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் 1,791 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரையில், 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாணவர்களுக்கும் பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.

அதுவரையில் பள்ளி மாணவர்கள் சீருடையிலும், கல்லூரி மாணவர்கள் தங்களின் கல்லூரி அடையாள அட்டை மூலம் பேருந்தில் பயணம் செய்திட அனுமதிக்குமாறு ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பாதைகள்... சுஹானா கான்!

தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டிரெய்லர் வெளியீடு - புகைப்படங்கள்

விஜய்யுடன் கூட்டணிக்கு முயற்சியா? டிடிவி தினகரன் பதில்! | TTV | TVK | ADMK | DMK

2026-ல் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்: அண்ணாமலை

பிகாரில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் மோடியா? நிதீஷ் குமாரா? -சந்திரபாபு நாயுடு பதில்

SCROLL FOR NEXT