தமிழ்நாடு

பிளாஸ்டிக்கிடம் விவாகரத்து வாங்கவேண்டியது காலத்தின் கட்டாயம்: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

பிளாஸ்டிக்கிடம் விவாகரத்து வாங்கவேண்டியது காலத்தின் கட்டாயம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
பிளாஸ்டிக்கிற்கு முழுமையாக தடை விதிப்பது என்பது சாத்தியமில்லை. 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 100 வருடமாக பிளாஸ்டிக் மனிதன் வாழ்வில் ஒன்றியிருந்தது. 

கணவன் மனைவி போல் இருந்த மக்களும் பிளாஸ்டிக் பொருட்களும் தற்போது விவாகரத்து செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்களே இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள். எனவே அவர்களை அரசு மதிக்கிறது. நானும் முழுமையாக மதிக்கிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. 

கேபினடே கட்டுக்குள் தான் உள்ளது. தேர்தல் என்பது அதிமுகவுக்கு சர்க்கரை போன்றது; சிலருக்கு பாகற்காய் போன்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT