மதுரைக்காரன் என்றாலே அரிவாளும் கஞ்சாவும்தானா?: அங்கலாய்த்த அமைச்சர்
தமிழ் சினிமாவில் மதுரைக்காரன் என்றாலே கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று தவறாக சித்தரிக்கின்றனர் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம் தெரிவித்துளார்.
மதுரை: தமிழ் சினிமாவில் மதுரைக்காரன் என்றாலே கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று தவறாக சித்தரிக்கின்றனர் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு வருத்தம் தெரிவித்துளார்.
ஞாயிறன்று மதுரையில் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் சார்பில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த ட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பரிசுகளை வழங்கினார் . நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அதிமுக அரசின் முயற்சியால் விளையாட்டுத்துறையில் 8-ம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. மாணவர்கள் தோல்வியைக் கண்டு பயப்படாமல் ஓடினால் வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம். மாரத்தான் போட்டியில் சிறுவர் - சிறுமிகள் பங்கேற்பதன் மூலம் அவர்களிடையே நட்பு, அன்பு, பாசம், உற்சாகம் மேம்படும்.
நமது மதுரை மாநகரமானது தொன்மை மற்றும் பாரம்பரியமிக்க நகரமாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. ஆனார் தமிழ் சினிமாவில் மதுரைக்காரன் என்றாலே கஞ்சா கசக்குவது, அரிவாள் எடுப்பது என்று தவறாக சித்தரிக்கின்றனர்.
அடிப்படையில் மதுரைக்காரர்கள் பாசக்காரர்கள். அவர்கள் பாசத்திற்காக எதையும் செய்வார்கள்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.