தமிழ்நாடு

சிராவயல்: மஞ்சுவிரட்டுக்குத் தயாராகும் காளைகள்

DIN

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ள மஞ்சுவிரட்டுக்காக காளைகளை தயார்படுத்தும் பணியில் அந்த கிராம இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகேயுள்ள சிராவயலில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் தை மாதம் 3-ஆம் தேதி நடைபெறும். இது மாவட்டத்தின் மிகப்பெரிய மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியாகும். இதற்கென சுற்றுவட்டார கிராமம் முழுவதும் காளைகளுக்கு நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மஞ்சுவிரட்டு விழாவுக்குத் தேவையான பணிகளை கிராமத்தினர் செய்து வருகின்றனர். கிராமத்திலுள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மஞ்சுவிரட்டுப் பொட்டலை சுத்தம் செய்தல், பார்வையாளர்கள் அமரக்கூடிய காலரி ஆகியவற்றை தயார் செய்து வருகின்றனர்.
ஜனவரி 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து முன்னோர் வழிபாடு செய்து நாட்டார்களை அழைத்து கொண்டு வாணவேடிக்கை மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு செல்வார்கள். அதனைத் தொடர்ந்து தொழுவில் உள்ள அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்படும். 
தொடர்ந்து கோயில் காளைகளை அவிழ்த்துவிட்ட பின்னர் மஞ்சுவிரட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படும். 
இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
நிகழ்ச்சியைக் காண வெளிநாட்டவர்களும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள். இதனால் திருப்பத்தூர், சிராவயல், தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பல கிராமங்கள் இப்போதே திருவிழா கோலம் பூண்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT