தமிழ்நாடு

காவல் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

DIN


தமிழகம் முழுவதும் காவல், தீயணைப்பு நிலையங்களுக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் திறந்தார். 
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் காவலர் குடியிருப்புகள், தேனி மாவட்டச் சிறைச்சாலை ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார். மேலும், அரியலூர் ஆயுதப்படை வளாகம், கோவை காந்திபுரம், தருமபுரி மகேந்திரமங்கலம், திண்டுக்கல் பழனி, ராமநாதபுரம் கேணிக்கரை, திருவாரூர், திருநெல்வேலி மணிமுத்தாறு ஆகிய இடங்களில் கட்டப்பட்ட காவலர் குடியிருப்புகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கடலூர் கருவேப்பிலங்குறிச்சி, கிருஷ்ணகிரி ஊத்தங்கரை, மதுரை கூடல்புதூர், திருவள்ளூர் காட்டூர் ஆகிய இடங்களில் காவல் நிலையங்களையும், கடலூர் சிதம்பரம், திருச்சி முசிறி ஆகிய இடங்களில் போக்குவரத்து நிலையங்களையும் அவர் திறந்தார். 
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக இணைப்புக் கட்டடம், சென்னை புரசைவாக்கத்தில் தேசிய பாதுகாப்பு பிரிவுக் கட்டடம், அம்பத்தூரில் மேற்கு மண்டல காவல் இணை ஆணையாளர் அலுவலகம், ராமநாதபுரத்தில் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை அலுவலகக் கட்டடம், திருவள்ளூர் கனகவல்லிபுரத்தில் காவல் பயிற்சிப் பள்ளி கூடுதல் கட்டடம், ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், விருதுநகர் ஆகிய இடங்களில் சிறைத் துறை குடியிருப்புகள், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, திருப்பூரில் சிறைத் துறை கட்டடங்கள் என மொத்தம் ரூ.89.29 கோடி மதிப்பிலான கட்டடங்களை அவர் திறந்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT