தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

DIN


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
2019 மார்ச் மாதம் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் வருகிற 14 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளதால், தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 18, 19 ஆகிய இரு தேதிகள் கால நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT