தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது உயர்நீதிமன்றக்கிளை

DIN

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உயர்நீதிமன்றக்கிளை அமைத்துள்ளது. 

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதில், மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். நிகழாண்டு ஜன. 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதியும், தேவையான காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர். 

இந்நிலையில், மற்றொரு தரப்பினர் சார்பில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியிருப்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழாக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார். இவர், கணக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை. யாரையும் கலந்தாலோசிப்பதில்லை. தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார். 

இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், பங்கெடுப்பும் குறையும்.  எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து ஜல்லிகட்டை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர். 

இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை உயர்நீதிமன்றக்கிளை அமைத்துள்ளது. மேலும் அவனியாபுரம் கிராம மக்கள் 16பேரை கொண்ட ஆலோசனைக் குழுவையும் அமைத்த நீதிபதிகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள் யாருக்கும் முதல்மரியாதை தரக்கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

SCROLL FOR NEXT