முகப்பு
தமிழ்நாடு

விலையுயர்ந்த செல்போன்களைத் திருடி வசமாக சிக்கிய திருடன்: சுவாரஸ்யமான நிகழ்வு

விலையுயர்ந்த செல்போன்களைத் திருடிய திருடன், அதில் வந்த விடியோ கால் அழைப்பை ஏற்றதால் வசமாகச் சிக்கிக் கொண்டான்.

Updated On : 12 ஜனவரி, 2019 at 2:51 PM
பகிர்:


சென்னை: விலையுயர்ந்த செல்போன்களைத் திருடிய திருடன், அதில் வந்த விடியோ கால் அழைப்பை ஏற்றதால் வசமாகச் சிக்கிக் கொண்டான்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள், அப்பகுதியிலேயே கூடாரம் அமைத்துத் தங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று அவர்களது செல்போன்கள் அனைத்தும் நள்ளிரவில் காணாமல் போனதை அறிந்து  அதிர்ச்சி அடைந்தனர். அதிகாலை 4 மணிக்கு அனைவரும் தங்களது செல்போன் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து பக்கத்தில் இருந்தவடரிடம் செல்போனை வாங்கி அவரவர் எண்ணுக்கு விடியோ காலில் அழைப்பு விடுத்தனர்.

Advertisement

அப்போது எதிர்பாராதவிதமாக, ஒரு செல்போனில் வந்த விடியோ காலை திருடன் ஆன் செய்ய, உடனடியாக அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தனர் செல்போனை இழந்தவர்கள்.

அதில், அந்த திருடனின் உருவம் தெளிவாக பதிவாக, அவன் எழும்பூர் ரயில்நிலையத்தில் இருந்ததையும் உறுதி செய்தனர். விடாமல் தொடர்ந்து விடியோ கால் செய்ததில் மீண்டும் அவன் எடுத்த போது, அவன் ரயிலில் இருந்தான். அதன் பிறகு அவன் போனை எடுக்கவேயில்லை.

விடாமல் அவனைத் தொடர்ந்து விடியோ காலில் பின்தொடர்ந்தவர்கள், கடைசியாக அவன் ரங்கநாதன் கடையில் உள்ள செல்போன் கடையில் இருந்ததையும் கண்டுபிடித்தனர். செல்போன் கடை ஒன்றில், அவன் திருடிய 6 செல்போன்களையும் பேரம் பேசி விற்க முயன்ற போது, அவனை சுற்றி வளைத்து பிடித்து அண்ணா சதுக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருடன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.