தமிழ்நாடு

ஹைட்ரோகார்பன்: மக்களின் எண்ணத்தை அறிந்தே முதல்வர் முடிவெடுப்பார்

DIN

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்தாலும், மக்களின் எண்ணத்தை அறிந்துதான் தமிழக முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
 திருவாரூர் மாவட்டம் திருக்கரைவாசல், நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 இதுகுறித்து நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனிடம் செய்தியாளர்கள் சனிக்கிழமை கேட்டதற்கு, மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை அறிவித்தாலும், அது தமிழக மக்களுக்கு உகந்ததா என ஆராய்ந்து, மக்களின் எண்ணங்கள், கருத்துக்களுடன் ஒத்துப்போகும் நிலைப்பாட்டைத்தான் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எடுப்பார். மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத திட்டங்களை அவர் ஒருபோதும் நிறைவேற்ற மாட்டார் என்றார் அமைச்சர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT