தமிழ்நாடு

கடந்த  ஆண்டை விட குறைவுதான்: மகிழ்ச்சியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 

போகி தினமான இன்று கடந்த  ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசின் அளவு குறைவுதான் என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 

DIN

சென்னை: போகி தினமான இன்று கடந்த  ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசின் அளவு குறைவுதான் என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 

தமிழ் மாதமான மார்கழியின் இறுதி நாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த நாளின்போது பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து போகியை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். 

அந்த வகையில் இந்த ஆண்டும் போகிப் பண்டிகை திங்களன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகாலையில் தங்கள்  வீட்டில் உள்ள பழைய பொருட்களை சேகரித்து வீடுகளின் முன்பு வைத்து எரித்தனர். 

முன்னதாக காற்றை மாசுபடுத்தும் வகையில் டயர் உள்ளிட்ட பொருட்களை எரித்து போகியை கொண்டாடக் கூடாது என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கி இருந்தது. 

இந்நிலையில் போகி தினமான இன்று கடந்த  ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசின் அளவு குறைவுதான் என்று தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆழிக்கருகில் அன்பின் வெளிப்பாடு... ஸ்வாசிகா!

அரசியல் அனுபவமில்லை, இருந்தாலும்... பிகாரின் இளம் வயது வேட்பாளரின் வாக்குறுதிகள்!

கனிகளிலே அவள் மாங்கனி... நியா சர்மா!

ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்! களமிறங்கிய படைகள்!

பச்சை என்பது உற்சாகம்... அஞ்சு குரியன்!

SCROLL FOR NEXT