தமிழ்நாடு

கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

DIN

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக திகழும் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக வருகை தருகின்றனர்.

இங்கு வருபவர்கள் கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுர் சிலை ஆகியவற்றை சுற்றுலாத்துறையின் மூலம் இயக்கப்படும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகுகளில் சென்று பார்வையிடுகின்றனர். 

இந்நிலையில், குமரி கடல் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து இன்று காலை ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து படகு போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT