தமிழ்நாடு

சேலம் - ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

DIN

சேலம் - ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

சேலம் அண்ணா பூங்கா அருகே ரூ 80 லட்சம் மதிப்பிலான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

அப்போது பேசிய முதல்வர்,
பொருளாதார, கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் தலைசிறந்து விளங்க இருபெரும் தலைவர்களே காரணம். இறைவனை நேரில் பார்த்ததில்லை. இருவரின் சிலை திறப்பது மிகப்பெரிய பாக்கியம். 

சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் என பெயர் சூட்டப்படும். எத்தனை தடைகள் வந்தாலும் மக்கள் துணையோடு தகர்த்தெறிந்து நலத்திட்டங்களை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT