தமிழ்நாடு

கொடநாடு விவகாரத்தை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் கண்காணிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

DIN


உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை கண்காணிக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
திருவாரூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 
கஜா புயலை காரணம் காட்டி திருவாரூர் தேர்தல் நிறுத்தப்பட்டது. எப்போது தேர்தல் நடந்தாலும் அமமுக அமோக வெற்றி பெறும். கொடநாடு கொலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் இறந்துள்ளனர். 
இந்த இறப்பில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து, முதல்வர் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக முதல்வருக்கு பயம் பதற்றம் உள்ளது தெரிகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டு வந்தவர்களை, நீதிபதி சிறைக்கு அனுப்ப மறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவு. உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை கண்காணிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT