தமிழ்நாடு

காவிரி நீா் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது: மு. தம்பிதுரை பேட்டி

DIN

கும்பகோணம்: காவிரி நீா் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது என்றும், மத்திய அரசின் எந்தவொரு திட்டமும் தமிழகத்துக்குப் பலனளிக்கவில்லை என குற்றம்சாட்டினார் மக்களவைத் துணைத் தலைவா் மு. தம்பிதுரை.

கும்பகோணம் அருகேயுள்ள திருநறையூர் கோயில்களுக்கு சனிக்கிழமை சென்ற தம்பித்துரை செய்தியார்களிடம் பேசுகையில், தேசியளவிலும், தமிழகத்திலும் பாஜகவின் செயல்பாடு சரியில்லை. அதிமுகவை அடிமைப்படுத்தும் எண்ணத்துடன் அதன் செயல்பாடு இருக்கிறது. அந்தப் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். 

மத்திய அரசு தமிழகத்துக்குத் தேவையான வளா்ச்சித் திட்டப் பணி மற்றும் இயற்கைப் பேரிடர் பாதிப்புகளை மீட்டெடுக்க நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசின் எந்தவொரு திட்டமும் தமிழகத்துக்குப் பலனளிக்கவில்லை.

 காவிரி நீா் பிரச்னையிலும் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டது. தொடா்ந்து குரல் கொடுத்ததால் அதிமுகவைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை மத்திய அரசு திரும்பப் பெறற வேண்டும். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக தொடா்ந்து எதிர்க்கும். மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கா்நாடக அரசு முயற்சிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றறத்தில் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார் தம்பிதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT