தமிழ்நாடு

நான் தனிக்கட்சி தொடங்கப் போகிறேனா?: அதிமுகவின் தம்பிதுரை பதில்  

தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் குறித்து மக்களவை துணை சபாநாயகரான , அதிமுகவின் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

DIN

சென்னை: தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் குறித்து மக்களவை துணை சபாநாயகரான , அதிமுகவின் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவை, மக்களவை துணை சபாநாயகரான அதிமுகவின் தம்பிதுரை  கடுமையாக விமர்சித்து வருகிறார். 

இதன் காரணமாக, முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் தம்பிதுரை தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சிக்கிறார்; அவர் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க விரும்புகிறார் என்று அமமுக தலைவர் டிடிவி தினகரன்  கருத்து தெரிவித்தார். 

அதன் காரணமாக தம்பிதுரை தனிக்கட்சி தொடங்கப் போவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவ ஆரம்பித்தன  

இந்நிலையில் தான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்திகள் குறித்து மக்களவை துணை சபாநாயகரான , அதிமுகவின் தம்பிதுரை விளக்கம் அளித்துள்ளார்.
 
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுகவை பாஜக அடிமை போல நடத்துகிறது என்றுதான் நான் கூறி இருந்தேன், மற்றபடி வேறு எதுவும் இல்லை அதேசமயம் நான் தனிக்கட்சி தொடங்கப் போவதாக வெளியான செய்தி முற்றிலும் தவறு. தனிக்கட்சி துவங்கும் எண்ணம் எனக்கில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லத்திக்குளம் வனப் பகுதி விவகாரம்: தென்காசி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு!

ரூ.273 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கு: தில்லி, ம.பி.யில் அமலாக்கத் துறை சோதனை

தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு

SCROLL FOR NEXT