கொடநாடு விவகாரம்: ஆளுநர் மாளிகை முன் நாளை திமுக நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு
கொடநாடு விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநர் மாளிகை முன் திமுக நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
கொடநாடு விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநர் மாளிகை முன் திமுக நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலக வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் வியாழக்கிழமை (ஜன.24) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் கொடநாடு விவகாரத்தில் நாளை ஆளுநர் மாளிகை முன் திமுக நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
கொடநாடு தொடர்பாக நாளை ஆளுநர் மாளிகை முன் திமுக நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. தமிழக அரசியல் புரியாமல் பேசுகிறார் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே.
Advertisement
Advertisement
பாஜக-அதிமுக கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை. தம்பிதுரை கூட இதனை எதிர்க்கிறார். கொல்கத்தாவில் பல எதிர்க்கட்சிகள் இணைந்து மாநாடு நடத்தியதால் ராகுல் பற்றி ஸ்டாலினால் பேச முடியவில்லை. எனினும் தனது நிலைப்பாட்டில் இருந்து ஸ்டாலின் மாறவில்லை. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை ஒடுக்க முயற்சிப்பதை மாநில அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.