முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு எப்போது?: முரளிதரராவ் பதில்

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் தமிழகத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என பாஜக தேசியச் செயலர் முரளிதரராவ் தெரிவித்தார். 

Updated On : 24 ஜனவரி 2019, 1:34 am IST
பகிர்:


மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் தமிழகத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என பாஜக தேசியச் செயலர் முரளிதரராவ் தெரிவித்தார். 
மதுரை பெருங்குடியை அடுத்த மண்டேலா நகர் சுற்றுச்சாலையில் இம்மாதம் 27ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள இந்த விழாவுக்கான இடத்தை பாஜக தேசியச் செயலர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் புதன்கிழமை பார்வையிட்டனர் . 
பின்னர் முரளிதரராவ் செய்தியாளர்களிடம் கூறியது: எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 10 மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் 4 வழிச்சாலை, கப்பல் போக்குவரத்துத்துறை, மருத்துவக் காப்பீடு, பாதுகாப்புத்துறை, தளவாட உற்பத்தி ஆகிய துறைகளில் பெரும் சாதனை புரிந்துள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 
தமிழகத்தைப் பொருத்தவரை மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி மட்டுமே முடிவு செய்வார்கள். தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு தான் கூட்டணி அறிவிப்பு வெளியிடப்படும். அதனை பிரதமர் அறிவிப்பார் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.