முகப்பு
தமிழ்நாடு

மாநாட்டில் எதிரொலித்த பிளாஸ்டிக் தடை

உலக முதலீட்டாளர் மாநாட்டு காட்சி அரங்குகளை ஆட்டோமொபைல் துறை ஆக்கிரமித்திருந்தது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடை

Updated On : 24 ஜனவரி 2019, 3:31 am IST
பகிர்:


உலக முதலீட்டாளர் மாநாட்டு காட்சி அரங்குகளை ஆட்டோமொபைல் துறை ஆக்கிரமித்திருந்தது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடை, மாநாட்டிலும் எதிரொலித்தது.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உலக முதலீட்டாளர் மாநாட்டிலும் எதிரொலித்தது. பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள், மாநாடு குறித்த செய்திகள் அடங்கிய கோப்புகள் அனைத்தும் பிளாஸ்டிக் இல்லாமல் இருந்தன. 
காகிதத்தினாலான பொட்டலங்கள், சணலால் தயாரிக்கப்பட்ட கோப்புகள் என மாநாடு முழுக்க பிளாஸ்டிக் இல்லாத சூழல் நிலை நிலவியது. இது வெளிநாடுகளில் இருந்து வந்த பார்வையாளர்கள், முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.