தமிழ்நாடு

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய களமிறங்கும் பள்ளிக்கல்வித்துறை 

DIN

சென்னை: தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால், கல்விப்பணிகளுக்காக தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யம் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை களமிறங்கியுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் மாறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.  

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் கோகுல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆசிரியர்களின் போராட்டத்துக்குத் புதன்கிழமையன்று தடை விதித்தனர். மேலும், மாணவர்களின் நலன் கருதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு வெள்ளிக்கிழமைக்குள் (ஜன. 25) பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

நீதிமன்ற உத்தரவினையடுத்து ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் வியாழன் காலை கூடி ஆலோசனை நடத்தியது. 

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடருவது என முடிவிடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.     

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால், கல்விப்பணிகளுக்காக தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யம் முயற்சியில் பள்ளிக்கல்வித்துறை களமிறங்கியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதால் ஆசிரியர்களின் போராட்டமானது மாணவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே அவர்களுக்கு பதிலாக ரூ.7500 தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தேர்வு செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி விதிமுறை எண் 18பி - ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் மீது ஊதிய பிடித்தம் அல்லது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

SCROLL FOR NEXT