பழைய 2018ம் சரி, புதிய ஆண்டும் சரி எந்த மாற்றமும் இல்லை.. வாழ்க்கையே பிடிக்கவில்லை என்பது போன்ற சலிப்பில் இருக்கிறீர்களா?
அப்படியானால் நிச்சயம் இது உங்களுக்கான செய்திதான்! வாருங்கள் எப்படி வாழ வேண்டும் என்று நம் அம்மா சொல்வதைக் கேளுங்கள்.
சென்னை வந்து தனது பக்தர்களுக்கு தரிசனம் அளித்த மாதா அமிர்தானந்தமயி, சென்னை பக்தர்களுக்காக சிறப்பிட்டுக் கூறிய சில விஷயங்களை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
அதாவது, இந்த நொடியை வாழுங்கள். தேவையின்றி மற்றவர்களுக்குள் ஏற்படும் பிரச்னைக்குள் தலையிடாதீர்கள் என்று இரண்டு பொக்கிஷமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
அதாவது, பிரச்னையைத் தீர்க்கிறேன் என்று நாட்டாமை ரேஞ்சுக்கு மற்றவர்கள் சண்டையில் மூக்கை நுழைக்க வேண்டாம். நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், இந்த நொடியை வாழ், பிறர் பிரச்னைகளில் தலையிடாதே என்கிறார் மாதா அமிர்தானந்தமயி.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பொதுவாகவே நம் மனதுக்குள்ளேயும், வெளியேயும் ஏற்படும் பிரச்னைகள் அனைத்துமே நாம் பார்க்கும் தவறான பார்வையாலும், புரிந்து கொள்ளும் தவறான அர்த்தத்தாலும் ஏற்படுகின்றன. இதனை சரி செய்ய வேண்டியது நமது கடமை. நாம் நமது வாழ்க்கையை வாழ வேண்டும். நமக்கும் சரி, பிறருக்கும் சரி உதவி செய்ய வேண்டும்.
வானம் இருண்டு இருக்கும் போது ஒரு சில நொடிகள் தான் மின்னல் மின்னுகிறது. கடவுளும் நம் வாழ்க்கையில் அப்படித்தான் ஒரு சில நொடிகளில் ஒளியேற்றுவார். வானவில்லும் அப்படியே. பூக்கள் ஒரே ஒரு நாள் மட்டுமே பூத்திருக்கின்றன. முழுபௌர்ணமியும் ஒரு நாள் மட்டுமே. அழகான பட்டாம்பூச்சியும் ஒரு சில நாட்கள்தான் வாழ்கின்றன. கடவுளின் படைப்புகளில் மிக அழகான இவைகள் எல்லாம் மிக சொற்ப நாட்களே இருந்தாலும் உலகையே மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு செல்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை இவர் சொல்வது உங்களுக்கும் பொருந்தினால் பின்பற்றிப் பாருங்கள்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.