தமிழ்நாடு

7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசு தீர்மானம்: ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப உள்ளதாக தகவல்

DIN


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக, ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை முன்கூட்டியே விடுதலை செய்யும் வகையில், தமிழக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. அந்த தீர்மானத்தின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர்  கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். 
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இதே கோரிக்கை தொடர்பாக நளினி, முருகன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கையும் அதே தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மனுதாரர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்த பிறகு ஏன் தாமதம் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினர். 
அப்போது, ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT