தமிழ்நாடு

மத்திய அரசோடு இணைந்து தமிழக அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

DIN

மத்திய அரசோடு இணைந்து ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தமிழக முதல்வர் முயற்சிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 சென்னையிலிருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: சேலம்-சென்னை விரைவுச் சாலை திட்டமானது, மத்திய அரசின் திட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மக்களின் கருத்தை அறியாமல், அவர்களது உடன்பாடில்லாமல் திட்டத்தை திணிக்கக் கூடாது. இதை, ஒட்டுமொத்த தமிழகமே எதிர்க்கும் நிலையில், முதல்வரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
 அதிமுக ஆட்சியில்தான் ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன என குற்றம் சுமத்தவில்லை. மேலும், தமிழகத்தில் மட்டும்தான் இது நடக்கிறது என்றும் கூறவில்லை. அனைத்து மாநிலங்களிலும் ஆணவப் படுகொலைகள் நடக்கும் சூழலில், இதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.
 மதவாத சக்திகள் தமிழகத்தில் தலைதூக்கியுள்ளன. சாதி, மதவாத சக்திகளால் இந்த ஆணவப் படுகொலைகள் அதிகரிக்கின்றன என்பதைத்தான் சுட்டிக்காட்டுகின்றோம். தமிழக அரசு சுதந்திரமாகச் செயல்படவில்லை. மத்திய அரசின் கிடுக்கிப்பிடியில் சிக்கியுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது. எனவே, மத்திய அரசோடு இணைந்து ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு, முதல்வர் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT