தமிழ்நாடு

கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு சோளம் இறக்குமதியில் வரிவிலக்கு: மோடிக்கு முதல்வர் கடிதம்

DIN


சென்னை: கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வரியின்றி சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்க படைப்புழு தாக்குதலால் நாடு முழுவதும் சோளத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்,  சோளத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோழி தீவனத்தில் 47% சோளம்தான் உள்ளது. தமிழகத்தில் கோழிப் பண்ணையில் சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, சோளத்தின் விலை உயர்வால் கோழிப் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோழிப் பண்ணையாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு சோளத்தின் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி எழுதியிருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பனிச்சாரல்! ஸ்ரீமுகி..

டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் அசத்துவார்: குமார் சங்ககாரா

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

நாடு விட்டு நாடு பயணம்: இசை நிகழ்வு காணவா? டெய்லர் ஸ்விஃப்ட் காய்ச்சலில் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT