தமிழ்நாடு

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வழக்குகள்: வேறு நீதிபதி விசாரணக்கு மாற்ற பரிந்துரை

DIN


தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் வேறு நீதிபதி முன்பாக பட்டியலிடக் கோரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். 
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்கும் தனி அதிகாரியாக மாவட்டப் பதிவாளர் சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனத்தை எதிர்த்து, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதேபோன்று ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. 
இந்த நிலையில், விஷால் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் தரப்பில், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் வேறு நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளன. எனவே, தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட வேண்டும். 
அதன்பின்னர் இந்த வழக்கில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும், வேறு நீதிபதி முன்பாக விசாரணைக்குப் பட்டியலிட, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT